தமிழ் சித்திரைப்புத்தாண்டான இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் கைவிசேஷம் வழங்கப்பட்டது.
கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
ஒவ்வொரு இனமும் தன்னுடைய கலாச்சாரம், பண்பாடு, அடையாளம், வீரம், பொருளாதாரம், இருப்பு தொடர்பாக ஒவ்வொரு கலாச்சாரத்தை கொண்டுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு அடையாளம் இந்த தமிழ் சித்திரைப்புத்தாண்டு தமிழ்த்தேசிய இனத்தின் அடுத்த நகர்வு அரசியல் இருப்பு தாங்களே தங்களை ஆளக்கூடிய அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். எமது கரங்களை இறுகப்பற்றி இலக்கு நோக்கி பயணிப்போம்.




