கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற் கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
2020 டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட எப்.பி.ஐ. அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற் கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்டவர் சஹ்ரான் ஹாசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) மூலம், கலிஃபோர்னியாவின் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆணையிலேயே 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற் கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், சமூக ஊடக பதிவுகள், நுட்பமான நீதிமன்ற சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எப். பி. ஐ. அறிக்கையில், இலங்கையில் இயங்கிய உள்ளூர் ஐ.எஸ். அமைப்பை சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய விதமும், அந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் திட்டத்தை எவ்வாறு திட்டமிட்டார் என்பதையும் விளக்குகிறது.
இலங்கை உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை எப்.பி.ஐ. யின் அறிக்கையின் உறுதித்தன்மையை சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.