யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புத்தாண்டு சிறப்பு பூசைகள் இன்று அதிகாலை முதல் ஆலய பிரதம குரு சுதர்சன கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம் பெற்றன.
காலை 4:00 மணியளவில் சுப்பிரபாதமும், 5:00 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம்/ அபிசேகமும், 6:00மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும், 6:45 மணியளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து 7:30 மணியளவில் கைவிசேசமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூசைகள் இடம் பெற்றதுடன் வல்லிபுரத்து ஆழ்வார் உள்வீதி வலம்வந்தார்.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடியவர்கள் கலந்துமொண்டிருந்தனர்.


