கிளிநொச்சியில் 16 சிறுவர்களை துஷ் – பிரயோகம் செய்த விளையாட்டுப் பயிற்றுநர் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
ADVERTISEMENT
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.