மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மொக்கா மேல் பிரிவில் உள்ள தொடர் லயன் குடியிருப்பு ஒன்று கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக தாழிறங்கி உள்ளது.
கடந்த 2023 ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி குறித்த லயன் குடியிருப்பு பகுதி தாழிறங்கியதைத் தொடர்ந்து அங்கிருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினமும் மீண்டும் அதே பகுதியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த முன் வர வேண்டும் என்று இந்த தொடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.