யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை நாகதம்பிரான் ஆலய பங்குனிப்பொங்கல் விழா இன்று (12) நாகதம்பிரான் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
வரலாற்று சிறப்புமிக்க நாகதம்பிரான் ஆலயமான மாமுனை நாகதம்பிரான் ஆலயத்தில் பக்தர்கள் பலர் தமது நேர்த்திக்கான காணிக்கைகளையும் காவடி போன்ற நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகளையும் பக்தியின் வெளிப்பாடாக செய்த வண்ணம் உள்ளனர்.
ஆலய முன்றலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளதோடு அவர்களுக்கான அன்னதானம் மற்றும் தாகசாந்தி என்பன ஆலய நிர்வாகத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் வரும் பக்தர்கள் அன்னதானம் உண்டு மன நிறைவுடன் செல்கின்றனர்.
ஆலய பொங்கல் நிகழ்வில் பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.



