முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், மேலும் 90 நாட்கள் பிள்ளையானை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.