கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இன்று 09.04.2025 கெக்கரி கண்ணுருவையிட் என்னும் புதிய வகை இனம் பரீட்சாத்தமாக முதன்முறையாக தருமபுரம் பகுதியில் விவசாயி ஒருவரினால் நடுகை செய்யப்பட்டு அதன் அறுவடை விழா இன்று நடைபெற்றது.
குறித்த அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயபோதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது விவசாயிகள் தெரிவிக்கையில், தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை கெக்கரி இனத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் விற்பனை செய்வதில் பெரும் சிரமங்கள் உள்ளதாகவும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுமாயின் சிறந்த விளைச்சலையும் லாபத்தையும் பெற முடியும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் கூறுகையில், பாரிய அளவில் உற்பத்தி செய்யப்படுமாயின் ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்பினை பெற்று தர முடியும் எனவும் தெரிவித்தார்.



