அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
அரச உத்தியோத்தர்களுக்கான 100 மணித்தியாலம் 13 நாள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிக்கான இறுதி நாள் நிகழ்வு இன்று(10-04-2025) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ். பகீரதன், பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி அதிபர் M.சவேஸ்குமார் களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி T.அபேவிக்கிரம மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் T. நித்தியானந்தன் சிங்கள பாடநெறிக்கான வளவாளர்களான பிறேமிளா கோபிநாத், ப. பஜிதா என பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் கடமையாற்றும் 39 அரச உத்தியோகத்தர்கள், கற்கைநெறியினை பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு சான்றுதல்களும் அதிதிகளுக்கு நினைவு சின்னமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









