விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கசிப்பு 16.5 லீற்றர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று காலை மூன்று வீடுகளில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதில் ஆறுபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 16.5 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் மாணிக்கபுரம் பகுதியில் வசிக்கும்
33, 66, 34, 44, 50, 57 வயதினை உடையவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சட்டவிரோத கசிப்பினை முழுவதுமாக ஒழிக்கக் கோரி கடந்த கிழமை குறித்த கிராம மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

