கல்மடுநகர், சித்திரை 8, 2025 – Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இரமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இன்று 09.04.2025 மதியம் 12.00 மணியளவில் கல்மடுநகர் மாகாண மூலிகை கிராமம் மற்றும் சித்த கிராமிய வைத்தியசாலை தளத்திற்குக் கல்வி விழிப்புணர்வு பயணமாக சென்றிருந்தனர்.
இக்காலப்பகுதியில், மாணவர்கள் சித்த மருத்துவத்தின் நடைமுறைச் செயற்பாடுகள், மூலிகைச் செடிகள் வளர்ப்பு, மற்றும் மூலிகை உணவுப் பழக்கவழக்கங்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றனர்.
வைத்தியர் இராஜ்மோகன் மனோராஜ் அவர்களால், சித்த கிராமிய வைத்தியசாலையின் சேவைகள், மூலிகை மருத்துவத்தின் பலன்கள் மற்றும் அந்த மருத்துவ முறையின் வாழ்க்கைமுறை அடிப்படைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
இச் செயற்திட்டம், மாணவர்களுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழலியலின் முக்கியத்துவத்தை உணரச் செய்த சிறப்பான வாய்ப்பாக அமைந்தது.




