அதிநவீன பயிற்சிக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது வீ.கே. வெள்ளையன் மத்திய நிலையத்திற்கு சொந்தமான காணியில் 2 ஏக்கருக்கும் அதிகமாக பலர் முறைகேடாக காணிகளை கையகப்படுத்தியுள்ளனர்.
மேலும், புதிய வீடமைப்பு திட்டத்தின் மூலமாக எஞ்சியுள்ள காணியிலும் வீடுகள் நிர்மாணிப்பதற்கு அரசியல் தலையீட்டுடன் தோட்ட நிர்வாகமும் இணைந்து நிலத்தை கையகப்படுத்தி வீடமைப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
எனினும் இந்த காணியில் வீடுகள் அமைத்தால் எதிர்கால இளைஞர்களுக்கு வருகின்ற நன்மைகள் முற்றாக தடுக்கப்படும்.
எமது மலையக மக்களுக்காக வீடமைப்பு திட்டத்தில் உள்ள அவசியமும், நன்மைகள் குறித்து எமக்கு நன்றாக தெரியும் எனவே புதிய வீடுகளை அமைப்பதற்கு வேறு காணியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இளைஞர்களின் எதிர்கால நலன்களை கருத்திற்கொண்டு இக்காணியை எம்மால் விட்டுக்கொடுக்க முடியததால் உடனடியாக சட்டவிரோத ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அகற்றி மீண்டும் இந்த நிலையத்திற்கு சொந்தமாக முழுமையாக பெற்றுக்கொடுக்க உடனடியாக ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், காணி, நில சீர்திருத்த ஆணையம், மற்றும் பிரதேச செயலக நிருவாக குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் கேட்டு கொள்கின்றோம் என பிரதேச இளைஞர் யுவதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



