வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற நிகழ்வுகள் ஆலயத்தில் நேற்று நடைபெற்றன.
குறித்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவுள்ள நிலையில், பூர்வாங்க கிரியைகளிலும் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகளிலும் பெரும் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை குறித்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக பல ஆதீனங்கள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துக்கொள்ள ஈழத்தின் பல பகுதிகளிலும், புலம்பெயர் தேசத்திலும் வாழும் மக்கள் ஆலயத்தில் ஒன்று கூடி வருகின்றனர்.
மேலும், நேற்றையதினம் எண்ணைக்காப்பு சாத்தும் கிரியைகளில், ராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி கலந்துகொண்டிருந்த அதேவேளை, இலங்கை ராணுவத்தினரால் அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குறித்த ஆலயம் பல வகைகளில் புனருத்தாரண வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













