நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர கடிகாவ பகுதியில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நிக்கவெரட்டிய மொன்னகுளம கரிஹட்டிக்குளத்தை சேர்ந்த எச்.எம். உபுல் மதுஷங்கா (37) ரஸ்நாயக்கபுர பொலிஸ் நிலையத்தில் திருமணமாகாத ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
ரஸ்நாயக்கபுராவின் கடிகாவா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இரவு 8.00 மணியளவில், மற்றொரு கான்ஸ்டபிளுடன் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ADVERTISEMENT