வர்த்தகர் ஒருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று (08) வரை நீடிக்கப்பட்டது.
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் வியாழேந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.