இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இன்று (08.04.2025) அதிகாலை 1.19 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ADVERTISEMENT
பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிலநடுக்கதால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று அந்நாட்டின் காலநிலை மையம் அறிவித்துள்ளது.
அத்துடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.