வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பங்குனி உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி கடைசி திங்களான 07.04.2025 அன்று மாலை 5.00 மணி அளவில் ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கந்ததாச குருக்கள் தலைமையில் ஒன்பது குருக்கள் குழாமினால் பூசைகள் இடம்பெற்றது.
அதன் பின்னர் கண்ணகி அம்மன் உள்வீதி வலம் வந்து அலங்கரிக்கப்பட்ட மஞ்ச தேர் பவனியில் வெளி வீதி வலம் வர அடியார்கள் கூட்டம் கண்ணகி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதோடு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது.
ADVERTISEMENT




