தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது.
குறித்த செயலமர்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரீட்சை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் Mrs. Arosha Vidyabhushana கலந்து கொண்டு விளக்கமளித்திருந்தார்.
அத்துடன், செயலமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாவட்ட பரிசோதகர், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ம.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

