18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகின்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த போட்டிற்கான நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்று குஜராத் அணிக்கு 153 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 16 ஓவர் நிறைவில் 03 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது