சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வெளியும் மலை ஆறுகளும் சூழ்ந்த அழகிய கிராமமமாம் தாமரைக்குளம் கிராமத்தில் தனிக்கோயில் கொண்ட இலங்கை ஷீரடி மக்களினால் போற்றப்பட்டும் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் வருடாந்த ஆண்டு விழா ஆனது கடந்த 2025/04/03 திகதி பஞ்ச பூதங்களின் ஆசிர்வாதத்துடன் ஷீரடி நாதருக்கு பாலபிஷேகத்துடன் ஆரம்பமானது.
இவ் ஆண்டு விழாவானது தொடர்ச்சியாக பத்துநாட்கள் இடம்பெற்று 2025/04/12 திகதி பைரவர் பூசையுடன் நிறைவடையவுள்ளது.
மேலும் இவ் ஆண்டு விழாவை சிறப்பிக்க மலேசியாவில் இருந்து சர்வதேச ஆன்மீகவாதியும் ஆன்மீக சுற்று குழுமத்தின் தலைவருமான மாயா மாதாஜி அவர்கள் வருகை தந்துள்ளார்.
அதனை தொடர் அவர்களின் ஆன்மீக உரையும், மதிய நேர விசேட உரையும் மக்களுடன் கலந்துரையாடலும் தினசரி 12.00 மணிக்கு நிகழ்த்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆலயத்தின் நிகழ்வுகள் யாவும் ஆலய ஸ்தாபகர் மட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டை வசிப்பிடமாக கொண்ட சீதாவிவேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




