வவுனியா நெற்போல் பிரிமியர் லீக்(VNPL) போட்டிக்கான மாபெரும் ஏலம் நேற்று நடைபெற்றது.
வவுனியா மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்தவுள்ள வவுனியா நெற்போல் பிறிமியர் லீக் (VNPL)சுற்றுப்போட்டிக்கான வீரர்களை தெரிவுசெய்வதற்கான ஏலம் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
சுமார் 100 வீரர்கள் பங்குபற்றிய இந் நிகழ்வில் போட்டியிடவுள்ள 5 அணிகளுக்குமாக ஒரு அணியில் 12பேர் வீதம் 60வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு அணியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வீரர்களும் ஏனைய 4 வீரர்களும் வடக்கு மாகணத்தை சேர்ந்த வெளிமாவட்ட வீரர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சுற்றுப்போட்டியில் பவர்பாசர்ஸ், டினாமிக்7, வுளொக்கிங் றொக்கெற்ஸ், பிவோட் பாட்டி, பாஸ்ட் புரெக்டர்ஸ் ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளதுடன் அந்த அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களின் பங்குபற்றுதலுடன் ஏலம் இடம்பெற்றது.





