ஐ.பி.எல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் சி.எஸ்.கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவர் அக்சர் படேல் நாணயசுழற்சியில் வென்று துடுப்பெடுத்தட்டத்தை தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் தலைவராக களம் இறங்கினார்.
டெல்லி அணியின் மெக்கர்க்- கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் மெக்கர்க் அஸ்வினிடம் பிடி கொடுத்து ஆட்மிழந்தார். இதனால் ஓட்டக் கணக்கை தொடங்காமல் டெல்லி விக்கெட்டை இழந்தது.
2ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் அபிஷேக் பொரேல் ஜொடி சேர்ந்தார். இவர் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் பொரேல். இந்த ஓவில் டெல்லி 19 ஓட்டங்கள் குவித்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 51 ஓட்டங்கள் விளாசியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
7ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பொரேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 33 ஓட்டங்கள் சேர்த்தார். அடுத்து அக்சார் படேல் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கருக்கு தூக்கினார்.
முதல் 10 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் குவித்தது. அப்போது கேஎல் ராகுல் 29 ஓட்டங்களும் அக்சார் படேல் 20 ஓட்டங்களும் சேர்த்திருந்தனர். 11ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் அக்சார் படேல் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 90 ஓட்டங்களாக இருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் விரைவாக ஓட்டங்களை குவிக்க முயற்சித்தது. 12ஆவது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ஓட்டங்கள் கிடைத்தன. 13ஆவது ஓவரில் 10 ஓட்டங்கள் கிடைத்தன.
14ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து கே.எல். ராகுல் 33 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 8 ஓட்டங்கள் கிடைத்தன. 15ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க, ரிஸ்வி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் டெல்லி அணிக்க 17 ஓட்டங்கள் கிடைத்தன.
16ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 8 ஓட்டங்கள் கிடைத்தன. 17ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ஓட்டங்கள் சேர்த்தார். அப்போது டெல்லி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 9 ஓட்டங்கள் கிடைத்தன.
18ஆவது ஓவரை பதிரன வீசினார். இந்த ஓவரில் 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 19ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் கொடுத்த பிடியெடுப்பை சவுத்ரி தவற விட்டார். 4ஆவது பந்தை ஸ்டப்ஸ் அபாரமாக சிக்சருக்கு தூக்கினார். அதோடு 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ஓட்டங்கள் கிடைத்தன. அதோடு 19 ஓவரில் 176 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை பதிரன வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ஓட்டங்கள் விளாசினார். அடுத்த பந்தில் அஷுடோஸ் சர்மா ரன்னவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரன 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 12 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரன, நூர் அகமது ஆகியோர தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இலந்து 158 ஓட்டங்களை பெற்று 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோள்வியுற்றது.
