உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கான செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான .எஸ்- முரளிதரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (05.04.2025) பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது.
இச் செயலமர்வில் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் அஞ்சல் மூல அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படைகளின் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவின் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சந்தன டி சில்வா, பிரதி ஆணையாளார் திரு. கே. ஜே. எஸ். மகாதேவ மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. வே. சிவராசா ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் நியமிக்கப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படையினர்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





