இலங்கை மற்றும் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ பதக்கம் வழங்கப்பட்டது.
வெளிநாடு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம், இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு’ என்ற திருக்குறளை கூறி அதற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமையாகும்.
இது இந்திய இலங்கை மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் ஆழமான நட்புக்கு கிடைத்த மரியாதையாகும்.
உண்மையான அண்டை நாடாகவும் நண்பராகவும் நமது கடமைகளை நிறைவேற்றியிருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.


