வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியிலான கராத்தே போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இதில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ADVERTISEMENT
திறந்த போட்டியாக குறித்த போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிசிர குமார கலந்து கொண்டு குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தார்.





