கிண்ணியா கல்வி வலயம் குறிஞ்சாக்கேணி கோட்டப் பாடசாலை சூரங்கல் அல் அமீன் மஹா வித்தியாலய மாணவன் AHM. இர்பான் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டத்தின் பின் தங்கிய பாடசாலையான அல் அமீன் மஹா வித்தியாலயம் உதைபந்தாட்ட துறையிலே தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தடம் பதித்து வருகிறது. பாடசாலை வரலாற்றில் இதுவரைக்கும் 4 வீரர்கள் தேசிய அணியில் இடம்பிடித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிகளில் இப்பாடசாலையில் இருந்து 4 வீரர்கள் பிரகாசித்திருக்கிறார்கள்.
உதைபந்தாட்டத்திற்கான போதிய வசதி இல்லாவிட்டாலும் பாடசாலையின் வழிகாட்டலும் வீரர்களின் மன வலிமையும் தேசிய ரீதியாக சர்வதேச ரீதியாக சாதனை படைக்க வைக்கிறது.
கிண்ணியா அல் அமீன் மஹா வித்தியாலய அதிபர் AWM. பைசல், பிரதி அதிபர் S. றிஸ்மித், உடற்கல்வி ஆசிரியர் SM. அஸ்மித், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் RFM. நபீர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் இணைந்து ஊக்கப்படுத்துகின்றனர்.
இவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.


