இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆட்டமிழப்பொன்றை வித்தியாசமாக கொண்டாடியமை தொடர்பில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் திக்வேஷ் ராதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் பஞ்சாப் அணி துடுப்பாடியபோது அந்த அணியின் ப்ரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை லக்னோவின் திக்வேஷ் ராதி கைப்பற்றினார்.
ப்ரியன்ஷ் ஆர்யா ஆட்டமிழந்து திரும்பியபோது, அவருக்கு அருகில் நெருக்கமாகச் சென்று, கையில் புத்தகத்தை வைத்து எழுதுவதுபோல் செய்தமைக்காக திக்வேஷ் ராதியை நடுவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், விக்கெட்டை வீழ்த்தியதன் பின் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டமைக்காக திக்வேஷ் ராதி, இந்தியன் ப்ரீமியர் லீக் விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு ஒரு குறைபாட்டு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.