இவர் புலம் பெயர் தமிழர் ஒருவராவார் .இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து கொண்டு தமிழ் உணர்வாளன் போல் பேசும் இவர் திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்த தமிழர்களை தானும் ஒரு தமிழர் என்ற உணர்விழந்து போலி ஆவணத்தை பயன்படுத்தி அப்பாவி கூலித்தொழிலாளிகளை நீதிமன்றம் வரை கொண்டு சென்று அவர்களின் பொருளாதாரத்தின் அரைவாசியை நீதிமன்றத்திற்கு செலவழிக்கும் வகையிலும் அவர்களின் நேரம் வீணாகும் வகையிலும் செயற்பட்டு வந்தவரும் ஆவார்.
அவருடைய பண அகங்காரத்தை காட்டும் வகையில் பொலிஸாரின் உதவியுடன் அப்பாவி மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்திவுள்ளதோடு அப்பிரதேச மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன தொழிற்சாலைக்கு காணியை தாரைவார்த்து கொடுத்து விட்டு இப்போது தமிழ் உணர்வாளன் போல் அங்கிருந்து பேசும் இவர் தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான ஒருவராவார்.
இவர் அவரின் காணியை அத்தொழிற்சாலைக்கு 25 வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கியும் உள்ளார்.

