ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அகிலவிராஜ் காரியவசம், வஜீர அபேயவர்த்தன, தலதா அத்துக்கோரல உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.இங்கு கருத்து தெரிவித்த வஜீர அபேயவர்த்தன மேற்படி விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்
இந்த நாடானது வறுமை நிலைக்கு சென்றது. அந்த நிலையில் பொறுப்பேற்றார்.அப்பொழுது ரணில் விக்கிரமசிங்க சொல்லவில்லை பணம் இல்லை என்று அப்பொழுது ஐக்கியதேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம் மாத்திரம் கிடைத்தது. அந்த ஆசனத்தை வைத்து ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஜனாதிபதியானார். அதன் மூலம் மக்களுக்கு அஸ்வெசும,காணி உறுதிகளை வழங்கினார்.ஆனால் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருந்தோம் அதன் மூலம் மாகாண சபையை உருவாக்கினோம் அதனை இப்போதைய அரசாங்கம் நிறுத்த முயல்கிறது. இந்த விடயம் இங்குள்ள இளைஞர்களுக்கு தெரியாது. மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்பு முதலாவது முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது இந்தியாவுடன் சில ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டிருந்தார்.மின் சக்தி சம்மந்தமாக ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருந்தார்.இந்திய பிரதமர் நாளை மறுதினம் இலங்கை வருகின்றார்.
நாம் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் ஆசியாவுடன் போட்டி போடவேண்டும் இந்த ஒப்பந்தத்தை நீக்கினால் உலக நாடுகள் எம்மை நம்பமாட்டார்கள்.அந்த இரண்டு பில்லியன் டொலரும் நீக்கப்பட்டால் நாங்கள் எங்கு தேடுவது தண்ணீர் குடிக்க முடியாது. உரிமைகளை பெறமுடியாது, யானைகளுக்கான பாதுகாப்பு வேலிகளை போடமுடியாது ஆகவே நாங்கள் மீண்டும் கஷ்டத்தில் வீழ்வோம் எனவே வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெற வைக்கவேண்டும்.

