அனுமதிப்பத்திரம் இல்லாத “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கி மற்றும் ரி – 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஓய்வுபெற்ற சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் ஒருவர் சம்மாந்துறைப் பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மலையடிக்கிராமம் 4 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஓய்வுபெற்ற சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.