கொழும்பு எல்லைக்குட்பட்ட ரயில் நிலைய உப அதிபர்கள் இன்று (31) நள்ளிரவு முதல் தற்காலிகமாக தங்களின் கடமைகளில் இருந்து விலகுவதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்ப புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மேலும் அவர்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கடமைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
மேலும், தொழிற்சங்க நடவடிக்கையின் முதற்படியாக இந்த முடிவை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.