1822 – கிரேக்கத் தீவான கியோசில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்க அங்குள்ள மக்களை உதுமானிய இராணுவம் படுகொலை செய்தது.
1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் எசுப்பானியக் கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டன.
1889 – ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1899 – முதலாவது பிலிப்பைன் குடியரசின் தலைநகர் மாலோலோசு அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது.
1917 – ஐக்கிய அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918 – ஏறத்தாழ 12,000 முஸ்லிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1930 – திரைப்படங்களில் பாலியல், குற்றங்கள், சமயம், வன்முறை நிகழ்வுகளைக் காண்பிப்பதற்கான குறியீடுகள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1931 – அமெரிக்காவின் டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 கேன்சஸ் மாநிலத்தில் விபத்துக்குளாகியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தீவை ஜப்பான் பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜேர்மனி வானோடி ஒருவர் ஜேர்மனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.
1949 – நியூபவுன்லாந்து கனடியக் கூட்டமைப்பில் 10வது மாநிலமாக இணைந்தது.
1951 – அமெரிக்கவின் யூனிவாக் 1 என்ற முதலாவது வணிகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.
1964 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு காஸ்டெலோ பிராங்கோ தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் களித்த எக்ஸ்புளோரர் 1 விண்கலம் புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
1991 – ஜோர்ஜியாவில் 99 விழுக்காடு வாக்காளர்கள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
1995 – உருமேனியாவில் ஏ310 வானூர்தி வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 60 பேரும் உயிரிழந்தனர்.
2004 – ஈராக் போர்: ஈராக்கின் பலூஜா நகரில் நான்கு அமெரிக்க தனியார் போர்ப்படையினர் கொல்லப்பட்டனர்.
2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.
1998 – நெட்ஸ்கேப் மொசில்லா மூலக் குறியீட்டை திறந்த மூல உரிமத்தின் கீழ் வெளியிட்டது.
2004 – அன்பார் மாகாணத்தில் ஈராக் போர்: ஈராக்கின் பல்லூஜாவில், பிளாக்வாட்டர் யுஎஸ்ஏவில் பணிபுரியும் நான்கு அமெரிக்க தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் பதுங்கியிருந்து கொல்லப்பட்டனர்.
2005 – பலோமர் ஆய்வகத்தில் வானியலாளர் மைக்கேல் இ. பிரவுன் தலைமையிலான குழுவால் குள்ள கிரகமான மேக்மேக் கண்டுபிடிக்கப்பட்டது.
2016 – நாசா விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் மிகைல் கோர்னியென்கோ ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வருட கால பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பினர்.
2018 – ஆர்மீனிய புரட்சியின் ஆரம்பம்.



