புனித நோன்பு பெருநாள் தினமான இன்று (31) திருகோணமலை மாவட்ட, முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
இதனை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளி நிருவாகத்தின் ஏற்பாட்டில் ஈச் கழகம் மற்றும் புஹாரி ஜனாசா நலன்புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
ADVERTISEMENT
குறித்த குத்பா பிரசங்கம் மற்றும் தொழுகையை தம்பலகாமம் பிரதேச கிளை ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.குசைன் நடாத்தினார். இதில் பல நூற்றுக் கணக்கான ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டதுடன் ஒவ்வொருவரும் கைலாகு கொடுத்து நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.


