மூச்சடங்கா இரவுகள் திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் யாழ்தேவி கலைஞர்கள் கெளரவிப்பு நேற்று (29) கொடிகாமத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இயக்குனர் கந்தசாமி லோககாந்தன் இயக்கத்தில் அன்பு மயில் அவர்களின் தயாரிப்பில் மூச்சடங்கா இரவுகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 3.30 மணியளவில் இயக்குனர் கந்தசாமி லோககாந்தன் தலைமையில் ஆரம்பமானது.
இலங்கையின் அதிகமான இடங்களில் படமாக்கப்பட்ட மூச்சடங்கா இரவுகள் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுடன் இந்த திரைப்படத்தில் பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது
விருந்தினர்களால் மூச்சடங்கா இரவுகள் திரைப்படத்தின் இசை வெளியீடு செய்யப்பட்டதுடன் யாழ் தேவி கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தென்மராட்சி பெருமகன் சி.கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டதுடன் ஏனைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்,நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், கவிஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



