ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு கண்டது.
இன்று(29) மாலை 03.00 மணிக்கு கிளிநொச்சி நண்பர்கள் விருந்தகத்தில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவையினரின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக கலை பீடத்தினுடைய பீடாதிபதி ரகுராம் அவர்களின் தலைமையில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் சயனைட் நாவல் வெளியீடு கண்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக IBC மற்றும் றீச்சா குழுமத்தினுடைய நிர்வாகியான திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, கிளிநொச்சி மாவட்ட உதவி திட்டமிடல் அதிகாரி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் அஜந்தகுமார், கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தினுடைய தலைவர் பரமநாதப்பிள்ளை, மூத்த நாடக கலைஞர் ஏழுமலைப்பிள்ளை போன்றவர்களும் முன்னாள் போராளிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சயனைட் நாவலானது கடந்த வருடம்(2024) மார்கழி மாதம் இந்தியா சென்னையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.


