மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களின் பிரதி நிதிகளை சந்திக்கும் வகையிலும், மன்னார் மாவட்டத்தில் இளைஞர்கள் விளையாட்டுத்துறை சார்பாக எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(29) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மேற்கொண்டிருந்தார்.
மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கில் இடம் பெற்ற குறித்த சந்திப்பில் மன்னார் மாவட்ட விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போது நீண்ட காலமாக கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்படாது காணப்படுக்கின்ற நறுவிலிக்குளம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகளை விரைவில் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார் .
அதே நேரம் குறித்த மைதானத்தின் தற்போதைய நிலை தொடர்பில் பார்வையிடுவதற்காக அமைச்சர் தலைமையிலான குழுவினர் நறுவலிக்குளம் சர்வதேச மைதான பணிகள் இடம் பெற்றுவரும் பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





