கொழும்பு – கிராண்ட்பாஸ் பராக்கிரம வீதி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெல்ம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
ADVERTISEMENT
கிராண்ட்பாஸ் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.