பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் என தெரியவருகிறது.
ADVERTISEMENT
பெப்ரவரி 27 முதல் மார்ச் 19 வரை தேசபந்து தென்னகோனுக்கு தலைமறைவாக இருப்பதற்கு உதவியதற்காக, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.