சங்கானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சிறீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான வீட்டுத்திட்ட பிரச்சினை, கட்டாக்காலி கால்நடைகள் தொடர்பான பிரச்சினை, சுகாதாரம் தொடர்பான விடயங்கள், வீதி தொடர்பான விடயங்கள், விவசாயம் தொடர்பான விடயங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சில விடயங்களுக்கு உடனடி தீர்வுகளும் வழங்கப்பட்டன. மேலும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார், பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், பொது சுகாதார வைத்திய அதிகாரி, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.




