மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில் கடல்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய அரசாங்கத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் முகமாக பின்தங்கிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நன்னீர் மீன்பிடி சம்பந்தமான முன்னேற்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் கல விஜயம் ஒன்று இடம்பெற்றது
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவலி ஆறு இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் திலாபியா மீன் வளர்ப்பு திட்டத்தையும் பார்வையிட்டார் இந்த நன்னீர் மீன்பிடி திட்டத்தின் மூலம் இப்பகுதியில் வாழும் 60 குடும்பங்கள் இதனால் நன்மை அடைய உள்ளனர்
கடத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சர் ரா சந்திரசேகரன் இங்கு கருத்து தெரிவிக்கையில் கிராமங்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி செயல்பட்டு வருவதாகவும் நன்னீர் மீன் படியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்ற அரசாங்கத்தினால் புதிய வரவு செலவு திட்டத்தின் மூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் இங்கு கருத்து தெரிவித்தார்
அமைச்சரின் இந்த விஷயத்தின் போது தேசிய மக்கள் சக்தி செங்கலடி அமைப்பாளர் கே தில்லைநாதன் மற்றும் மகளிர் அணி தலைவி கே வாணி கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மீனவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


