Inbox
Search for all messages with label Inbox
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களது அறிமுகக் கூட்டம் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் 75 வேட்பாளர்களினதும் பங்கேற்போடு, நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மாவட்டக் கிளைத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்துக்கான தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கி, முறைமைப்படுத்தப்பட்ட வகையில் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை செயலாளர் வீரவாகு விஜயகுமார், குறித்த மூன்று சபைகளினதும் மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், சுப்பிரமணியம் சுரேன் ஆகியோர் கருத்துரைகளையும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



