மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, ஒட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்நடவடிக்கையின் போது நேரடி பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார வெளிகள உத்தியோகத்தர்கள் தெளிகருவி இயக்குனர்கள், டெங்கு கள பணியாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கு பற்றினர்
இதன்போது வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு குடம்பிகள் உருவாகும் இடங்களை கண்டறிந்ததுடன் டெங்கு குடம்பிகளை இனங்கானப்பட்ட ஒரு சில வீட்டின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டனர்
அத்தோடு டெங்கு குடம்பிகள் உருவாகாது வண்ணம் மக்களுக்கு அறிவித்தால் வழங்கப்பட்டது.



