புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு வருடம் தோறும் குச்சவெளி பிரதேச சபையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இப்தார் நிகழ்வு இம்முறையும் குச்சவெளி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித் அவர்களின் தலைமையில் குச்சவெளி தலைமை அலுவலகத்தில் 26.03.2025 திகதி புதன்கிழமை நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் வெ.இராஜசேகர் அவர்களும், கௌரவ அதிதியாக திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.முரளிதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக குச்சவெளி பிரதேச ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெக் அப்துல் அஸீஸ் மௌலவி அவர்களும், அத்துடன் சனசமூக நிலையங்களின் நிர்வாக உறுப்பினர்கள், குச்சவெளி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




