மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர் மக்களால் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 15 ம் திகதி, மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தாக்;குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.