இலங்கை வாழ் குடிமக்களின் ஆன்மீக பலத்தை வளர்க்கும் வகையில், அனைத்து மக்களுடனும் இணைந்து இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடைபெறும் என்று பௌத்த ஆய்வுகள் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
தேசிய வெசாக் விழாவை நடத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பொது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் நேற்று (25) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ADVERTISEMENT





