பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளித்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், மேனாள் தவிசாளர்களான சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், அருணாசலம் வேழமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பூநகரி பிரதேச சபையின் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம், புனித திரேசாள் தேவாலயம் மற்றும் கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்றில் சமயாசார வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மேற்படி சபைக்கான வேட்புமனு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல் பூநகரி பிரதேச சபைக்கான பதினொரு வட்டாரத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறோம். கடந்த தேர்தல்களிலும் பதினொரு வட்டாரங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இம்முறையும் வெற்றி பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம் என தெரிவித்தார்.






