நியூசிலாந்தின் தெற்கு தீவில் செவ்வாய்க்கிழமை (25) 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ஸ்னேர்ஸ் தீவுகளுக்கு வடமேற்கே 155 கி.மீ தொலைவில் 12 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
சுமார் 5000 மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாகவும், பொருட்கள் விழுந்தன, கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தினால் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்துவருகின்றது.
எனினும், வெளியேற்றங்கள் குறித்த உத்தரவுகள் இதுவரை எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், மக்கள் கரையோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.