இச் சம்பவம் இன்று காலை 8.30 மணிக்கு மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் 320 என் புரவுன்லோ கிராம உத்தியோகத்தர் காரியாலயம் முன்பாக இடம் பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 7 பிரிவுகள் கொண்டுள்ள இந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் 7000 மக்கள் உள்ளனர் எனவும் நாளாந்தம் இப்பிரிவில் உள்ள மக்கள் நிரந்தர கிராம உத்தியோகத்தர் இல்லாத காரணத்தால் பாரிய இன்னல்களுக்கு மத்தியில் உள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் பலன் இல்லை என்றும் தற்போது புதிதாக கிராம உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படுவதால் உடன் கவணம் செலுத்தி இந்த பிரிவிற்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.




