தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாத்திக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹுசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார்.
1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே பயிற்சியாளராகவும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
படங்களில் நடிப்பதைத் தவிர, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் அவர் தோன்றினார்.
ஹுசைனி, போர் விளையாட்டு, சிற்பம், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார்.