கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் இன்மையினால் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் தமது நாளாந்த கடமையை செய்ய முடியாத நிலையிலுள்ளர் அத்துடன் பொதுமக்களும் தமது அவசர தேவை கருதி தமது அன்றாட தேவையினை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் மேலதிக அரசாங்க அதிபராகவருவதற்கு பலருக்கு தகுதியிருந்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பலர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு புதிதாக மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை பெற்று தர வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலக பணியாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் வேண்டுகின்றனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் விரைவாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை பெற்று தர வேண்டுமென வேண்டி இருக்கின்றனர்.